கொம்பு வச்ச சிங்கம் டா யாருக்குமே அடங்கல : இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டில் புதிய கட்டுப்பாடு

Madurai
By Irumporai Jan 07, 2023 11:29 AM GMT
Report

இந்த வருட பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டு

அந்த வகையில்  உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டு இருந்தது.

கொம்பு வச்ச சிங்கம் டா யாருக்குமே அடங்கல : இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டில் புதிய கட்டுப்பாடு | Jallikattu Competition Madurai New Rule

புதிய கட்டுப்பாடு

தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாடை மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டில் பங்குபெறும் மாடுபிடி வீரர்கள் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

அவர் மதுரையில் வேறு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.