ஓசில ஓட்டை வாங்கிடாத...வீரர்களை எச்சரித்த ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்

Thai Pongal Tiruchirappalli Jallikattu
By Thahir Jan 16, 2023 08:13 AM GMT
Report

திருச்சி சூரியூர் கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணனையாளர் வீரர்களை எச்சரிக்கும் முறை பார்வையாளர்களை சிரிப்பை உண்டாக்கியது.

விறுவிறுப்பாக நடக்கும் சூரியூர் ஜல்லிக்கட்டு 

திருச்சி திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.

திருச்சி சூரியூரியில் ஜல்லிக்கட்டு விழாவில் 600 காளைகளும் 400 காளையர்களும் பங்கேற்க ஏற்பாடு திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் இன்று நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் தேதி கோவில் திருவிழா முன்னிட்டு சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர். 400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு களத்திற்குள் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட உள்ளது. ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு காண வருவதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

களத்திற்குள் உள்ள இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் பகுதி முழுவதும் இரும்பு தடுப்புகளை கொண்டு பாதுகாப்பாக அமைத்துள்ளனர்.

பர்வையாளர்களை கவர்ந்த வர்ணனையாளர் பேச்சு

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் இப்பகுதி கிராம மக்கள் காண மிகுந்த உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டை காண வர துவங்கி உள்ளனர்.

jallikattu-commentator-who-warned-the-players

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க மோதிரம் இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 600 காளைகளும், 400 காளையர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளனர்.

நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணனையாளர் வீரர்களை பாதுகாப்பாக மேல ஏறு...மாடு திரும்புது...ஓசில ஓட்டை வாங்கிடாத என்னும் எச்சரிக்கை அறிவிப்புகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.