'' அட பீஸ்ட் நீதாண்டா...” - வைரலாகும் ஜாலியோ ஜிம்கானா லுக்

Vijay Beast JollyOGymkhana BeastSecondSingle
By Irumporai Mar 19, 2022 01:01 PM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான அரபிகுத்து பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில். அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியா ஜிம்கானா பாடல் கடந்த 16-ஆம் தேதி இன்று வெளியாகும் என ப்ரோமோ மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் விஜயே பாடியுள்ளார். கு கார்த்திக் என்பவர் பாடலை எழுதியுள்ளார். இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.