மோடியை சந்திக்க காத்திருக்கும் ஜோபைடன் , விளக்கம் கொடுத்த வெளியுறவுத்துறை அமைச்சர்

america jaishankar pmmodi jobiden
By Irumporai Apr 12, 2022 04:48 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வெளியுறவுதுறை அமைச்சர்களுக்கு இடையிலான ஆலோசனை கூட்டம் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கானொலி காட்சி மூலம் உரையாடினார், அப்போது பேசிய பிரதமர் மோடி :

உக்ரைனில் நடந்த போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வருத்தமளிப்பதாக கூறிய பிரதமர் மோடி இந்த சம்பவத்திற்கு இந்திய கண்டனம் தெரிவித்தாகவும் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியதாகவும் கூறினார்.அதே சமயம் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக மோடி கூறினார்.

அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசிய போது உக்ரைன் மக்களுக்கு இந்தியா செய்து வரும் உதவிகளை பாராட்டுவதாக கூறிய ஜோபைடன்,இந்த போரினால் ஏற்பட்டுள்ள இழப்புகளையும், தாக்கங்களையும் கூர்ந்து கவனித்து இந்த போரினை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.

அதே சமயம் மே 24-ம் தேதி ஜப்பானில் நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் எரிபொருள் வாங்கும் அளவானது ,ஐரோப்பா ஒரு நாள் மதியம் வாங்கும் எரிபொருளை விட ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஒரு மாதம் வாங்கும் மொத்த எரிபொருள் அளவினை விட குறைவு, ஆகவே உங்கள் கணக்கீடு ஐரோப்பாவில் இருக்க வேண்டும் என கூறினார்.