ஒருபோதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது - பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டம்..!
ஒருபோதும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
ஜெய்ஷா நிராகரிப்பு
சமீபத்தில், துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
அப்போது, பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும்போது, அருகில் இருந்தவர் கொடுத்த தேசிய கொடியை வாங்க மறுத்தார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.
இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.