பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவிற்கு பேய் பிடித்துள்ளது - லுலாவின் பேச்சால் சர்ச்சை
பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவிற்கு பேய் பிடித்துள்ளது என்று பிரேசிலின் முன்னாள் அதிபர் லுலாவின் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லுலாவின் சர்ச்சை பேச்சு -
இடதுசாரி தலைவரும் தொழிலாளர் கட்சியின் நிறுவனருமான லுலா பிரேசிலின் முன்னாள் அதிபர் ஆவார். இந்நிலையில், சா பவுலோவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் லுலா. அப்போது, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவிற்கு பேய் பிடித்துள்ளது. கொரோனா மருந்துகளில் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த பொல்சனாரோ கூறுவதெல்லாம் பொய் தான் என்று பேசினார். லுலாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலர் லுலாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
