திருடச்சென்ற இடத்தில் கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்த பாசக்கார திருடன்....!
திருடச்சென்ற இடத்தில் கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்துச் சென்ற பாசக்கார திருடனின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்த திருடன்
ஜெய்ப்பூரில் ஒரு இனிப்புக் கடையில் கல்லாவில் இருந்த ரூ.7000 பணம் திருடுப் போயிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விசாரணை நடத்தியதில், கடையில் ஒரு கடிதம் சிக்கியது.
திருடச்சென்ற இடத்தில் கடைக்காரருக்கு திருடன் கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கடிதத்தில்,
பசியாக இருந்ததால் உங்கள் கடைக்கு நான் சாப்பிட வந்தேன். என் காலில் அடிப்பட்டுள்ளது. என்னால் சரியாக வேலை செய்யமுடியவில்லை. எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால் கல்லாவிலிருந்து ரூ.7000 பணம் எடுத்துக் கொண்டேன்.
நீங்கள் ஏழை என்பது எனக்கு தெரிந்தது. அதனால், உங்களின் ஆறுதலுக்காக இந்தக் கடிதத்தை எழுதி வைத்துச் செல்கிறேன். என்னை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்காதீங்க. ஏன்னென்றால் நான் உங்களுடைய விருந்தாளி என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன பாசக்கார திருடன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
