முஸ்லிம்களுக்கு வீடு வாடகைக்கு விடக்கூடாது; கட்டுப்படுத்தனும்.. போஸ்டரால் பரபரப்பு!
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு விடக்கூடாது என்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடகைக்கு வீடு..
ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நந்தபுரி காலணி உள்ளது. இங்குள்ள பல வீடுகளுக்கு வெளியே முஸ்லிம்களுக்கு சொத்துக்களை வாடகைக்கு விடவோ அல்லது விற்கவோ கூடாது.
முஸ்லிம் ஜிஹாத்துக்களுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று பட வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்கள், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
போஸ்டரால் பதற்றம்
அங்கு அமைந்துள்ள 22வது வார்டு பாஜக கவுன்சிலர் அனிதா ஜெயின் தூண்டுதலால், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, "இந்துக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முஸ்லிம் மக்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக” அனிதா தெரிவித்துள்ளார்.
உடனே, அந்த பகுதியிலிருந்த முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கிடையில் இதுகுறித்த தகவலறிந்து விரைந்த போலீஸார் அவர்களது வீட்டுக்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை உடனடியாக அகற்றியுள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.