ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

Rajasthan
By Thahir May 21, 2023 06:45 AM GMT
Report

ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 9 வயது சிறுவனை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள போஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அக்ஷித். இச்சிறுவன் நேற்று காலை ஒரு திறந்தநிலை ஆழ்துளை கிணற்றின் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அப்போது அந்த சிறுவன் திடீரென அந்த ஆழ்துளை கிணற்றினுள் தவறி விழுந்துள்ளான். சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கி கொண்ட நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல மணி நேரம் மீட்பு பணியின் போது சிறுவன் அக்ஷித்துடன் பேச்சு கொடுத்த படி குழாய் வழியாக ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் வழங்கியுள்ளனர்.

உயிருடன் மீட்பு 

இச்சம்பவம் குறித்து அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் லால்சந்த் கட்டாரியாவும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.

jaipur boy trapped in borewell rescued

பின்னர் சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு சிறுவன் அக்ஷித் மீட்கப்பட்டான். ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவனின் உடல் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.