ஃபுல் போதையில் ரவுடிசம்.. போலீசிடமே வேலையை காட்டிய நடிகர் விநாயகன் - அதிகாரிகள் அதிரடி!
நடிகர் விநாயகன் போதையில் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகம்
தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகர் விநாயகன். தனுஷ் நடித்த ‘மரியான்’, விஷால் நடித்த ‘திமிரு’ போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கவுதம் மேனன் விக்ரம் கூட்டணியின் ‘துருவ நட்சத்திரம்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர்.

இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். மேலும், சமீப காலமாக இவர் மீது பல பாலியல் குற்றங்கள் எழுந்து வந்தது.
ரகளை
இந்நிலையில், நடிகர் விநாயகன் நன்றாக குடித்துவிட்டு எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்துக்குள் சென்று ரகளை செய்திருக்கிறார். தற்போது அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விநாயகனை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அவர் கைது செய்யப்பட்டது கேரளா திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை IBC Tamil