Jailer Update : இந்த செகண்டோட உங்க ஆட்டம் முடியுது : மிரட்டும் ஜெயிலர் போஸ்டர்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் படபிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த நடிக்க உள்ள படம் தான் ஜெயிலர்.
ஜெயிலர்
இந்தபடத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது . ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் 15 அல்லது 22 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அப்டேட்டை தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்த படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக பெயர்கள் அடிபட்ட நிலையில் தான் நடிப்பதை ரம்யா கிருஷ்ணனே உறுதி செய்திருந்தார். மேலும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார்.
மாஸாக வெளியான அப்டேட்
இந்த நிலையில், நிலையில் நேற்றைய தினம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் இன்று காலை 11 மணிக்கு ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் அப்போது முதலே சமூக வலைத்தளங்கள் களைக்கட்டின.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்