கணவரை பார்க்க சிறைக்கு சென்ற மனைவி.. ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்த ஜெயிலர் - அதிரடி கட்டிய எஸ்.பி!
தனது கணவரை பார்க்க வந்த பெண் ஒருவருக்கு சிறை காவலர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறைக்கு சென்ற பெண்
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன் 35 வயதான இவர் இருசக்கர வாகனங்களை பழுதுபார்க்கும் பட்டறை நடத்தி வந்தார். இவரது மனைவி 29 வயதான நிர்மலா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் இருசக்கர வாகனத்தை திருடியதாக கடந்த 2021ம் ஆண்டு கைது செய்யபட்டார்.
அதனால் இவர் சேலம் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ளார். இவரது மனைவி இவரை பார்ப்பதற்காக மத்திய சிறைக்கு செல்வார். அங்கு கைதிகளை பார்க்கவேண்டும் என்றால் மனு எழுதி கொடுக்கவேண்டும், அதனை பார்த்த பின்னரே அனுமதிப்பர்.
அந்த பிரிவில் சிறைக்காவலர் விஜயகாந்த் பணியாற்றினார், அவர் நிர்மலாவின் தொலைபேசி எண்ணை எடுத்துக்கொண்டார்.
ஆபாச மெசேஜ்
இந்நிலையில், அந்த காவலர் அந்த பெண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், "எனக்கு உன்னை பாக்கணும் போல இருக்கு. உன் வீட்டுக்கு வரட்டுமா?" என்றும், "சேலத்திற்கு வா, ஒருநாள் என்னுடன் தங்கிவிட்டுப் போ" என்றும் அடிக்கடி போன் செய்தும் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பிணையில் வெளியே வந்தால் அவர் போன் மெசேஜ் செய்து தொந்தரவு செய்த்துவதில்லை.
அவர் சிறைக்கு மீண்டும் சென்றதும் நிர்மலாவை அழைத்து ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து, நிர்மலா சேலம் மத்திய சிறை எஸ்பி வினோத்திடம் புகார் அளித்தார், அவர் இது குறித்து கடந்த ஆறு மாதத்தில் எந்தெந்த எண்களில் இருந்து அழைப்புகள் வந்தன என்று சிடிஆர் அறிக்கை பெற்று ஆய்வு செய்தனர். பின்னர், அந்த காவலர் விஜயகாந்தின் செயலை கண்டறிந்த எஸ்.பி உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.