ரஜினிக்கே டஃப் கொடுத்த தமன்னா; ஜெயிலருக்காக பல கோடிகளில் சம்பளம் அள்ளும் நடிகர்கள் - எவ்வளவு தெரியுமா?
ஜெயிலர் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம்தான் ஜெயிலர். இந்த படத்தில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ரம்யா கிருஷ்ணன் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார், தமன்னா, விஜய் வசந்த, விடிவி கணேஷ் , உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் "ஹுக்கும்" என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ரல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது .
இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு 100-120 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்காக 80-100 கோடி வரை சம்பளம் ரஜினிகாந்த் பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட மூன்று தலைமுறை ரசிகர்களை ‘தலைவா..’ என்று அழைக்க வைத்தவர் ரஜினி.
மோகன்லால்
மலையாள ஸ்டார் நடிகரான மோகன்லால் ஜெயிலர் படத்தில் கோமியோ ரோல் ஒன்று நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் தொடர்பான காட்சிகள் இந்த படத்தில் 10 நிமிடங்களுக்கு குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. பொதுவாக ஒரு மலையாள படத்திற்காக 18 கோடிவரை சம்பளம் வாங்கும் மோகனால் ஜெயிலர் படத்திற்காக 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜாக்கி ஷ்ராஃப்
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான ஜாக்கி ஷ்ராஃப் பொதுவாக ஒரு படத்தில் நடிக்க 17-20 கோடி வரை சம்பளம் வாங்குவாராம். ஜெயிலர் படத்திற்காக இவர் 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஜாக்கி ஷ்ராஃப் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன்
படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல..’ என டைலாக் பேசிய இவர், அதன் பிறகு இப்போதுதான் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். அதுவும், இப்படத்தில் ரஜினியின் மனைவியாக இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் 80 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தமன்னா
இவர் நடனமாடி வெளிவந்த ஜெயிலர் படத்தின் காவாலய்யா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று இப்போது இந்த பாடலுக்கு தமன்னா ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார். பொதுவாக ஒரு படத்தில் நடிக்க 3-5 கோடி சம்பளம் வாங்கும் தமன்னா ஜெயிலர் படத்திற்காக 3 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிவராஜ்குமார்
கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிவராஜ்குமார் பொதுவாக ஒரு படத்தில் நடிக்க 3-4 கோடி சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக இவர் 2-4 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.