ரஜினியின் ஜெயிலர் 2 வசூல் வேட்டை.., 5 நாட்களில் எத்தனை கோடி தெரியுமா?
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.477 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 திரைப்படம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தை திரையரங்குகளில் அதிக அளவில் மக்கள் பார்த்து வருகின்றனர்.
ஜெயிலர் முதல் பாகம் மொத்தமாக ரூ.605 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டாம் பாகம் 5 நாட்களில் ரூ.477 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படமும் ரூ.1,000 கோடி வசூலை எட்டவில்லை என்பதால் இப்படம் இந்தச் சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுவரை படத்தின் வசூல் விவரங்களைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இப்படம் ரூ.500 கோடி வசூலை எட்டும்போது படக்குழு சிறப்புப் போஸ்டரை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil