சிறையிலிருந்து விடுதலையாகும் சசிகலா எப்போது தமிழகம் வருகிறார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா வருகிற 27-ம் தேதி விடுதலையாவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் சசிகலாவுக்கு கொரோனா தொற்று மற்றும் நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா பத்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனால் சசிகலா விடுதலையாவது தாமதம் ஆகலாம் எனக் கூறப்பட்டு வந்தது.
தற்போது சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை சிறைத்துறை தொடங்கிவிட்டதாக தெரிகிறது. மேலும் சசிகலா விடுதலையானாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிப்ரவரி முதல் வாரம் தான் தமிழகம் வர இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.