மனைவி தொல்ல தாங்க முடியல...ஜெயிலுக்கு அனுப்பிருங்க - கணவனின் குமுறலை கேட்டு கண்கலங்கிய போலீஸ்
இத்தாலியில் மனைவியின் தொல்லை தாங்காத கணவன் போலீசுக்கு நூதனை கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இத்தாலியின் ரோம் நகரை ஒட்டிய கைடோனியா மாண்டெசெலியோ நகரில் வசித்து வரும் அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதாகும் நபர் ஒருவர் தனது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை என்றும், தயவு செயது தன்னை சிறைச்சாலையில் அடைத்துவிடுங்கள் என்றும் கோரிக்கையுடன் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரியான ஜியாகொமோ ஃபெரண்ட் கூறுகையில், ஏற்கனவே அந்த நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்துக்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பல மாதங்களாக வீட்டுச் சிறையில் இருந்து வரும் நிலையில் அவரின் தண்டனை காலம் முடிவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளது.
இந்நிலையில் அந்த நபர் தனது வீட்டில் இருந்து திடீரென தப்பித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீசாரை சந்தித்து இனிமேலும் என்னால் வீட்டில் இருக்க முடியாது, என்னுடைய மனைவியின் கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வீடு எனக்கு நரகம் போல உள்ளது எனவும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
கடைசியில் அவர் வீட்டில் இருந்து தப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.