ஜெய் பீம் படத்தில் மீண்டும் காலண்டர் சர்ச்சை : என்ன நடந்தது?
ஜெய்பீம் படத்திலிருந்து அந்த காலண்டர் காட்சி சர்ச்சையானதால் புதிய காலண்டர் மாற்றப்பட்டது. இந்த நிலையில் புதிய காலண்டரும்மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்திவிட்டு படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கின்ற நோக்கத்திற்காகவும் தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான அக்னி குண்டத்தை திட்டமிட்டு நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்தியதிற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்,
நடிகர் சூர்யா அவர்களுக்கும், இயக்குநர் ஞானவேல் அவர்களுக்கும் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார் திரைப்பட இயக்குநர் கெளதமன்.
இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம் தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் தமிழ் மக்களிடையே கலவரத்தை உருவாக்கி தமிழர் குடிகளுக்குள் நிரந்தர பகையினை உருவாக்கி குளிர் காய்ந்து கொண்டிருப்பதாக கெளதமன் கூறினார்.
கெளதமனை போலவே பலரும் இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். இதையடுத்து புதிய காலண்டர் படம் வந்துள்ளது. ஆனாலும் இந்த புதிய படமும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, புதிய காலண்டரில் லட்சுமி தேவி படம் இடம்பெற்றுள்ளது. கொடுமைகளில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரியின் பெயர் அந்தோணிசாமி. அந்தோணிசாமி வீட்டில் எப்படி இந்து கடவுள் காலண்டர் அப்டம் இருக்க முடியும்? கேட்டு வருகிறார்கள்.