பட்டையை கிளப்பும் ஜெய்பீமின் 2வது பாடல் - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தின் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 'ஜெய் பீம்' படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா பிறந்தநாளன்று அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. 'கர்ணன்' பட நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். சான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஜெய் பீம் என்ற தலைப்பே படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
மேலும் அந்தப் படம் உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா இந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் முதல் பாடலான பவர் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்திலிருந்து தல கோதும் என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது.
இந்தப் பாடலுக்கு ராஜூமுருகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார் பிரதீப்குமார் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...! IBC Tamil