மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷம்.. மத உணர்வுகளை புண்படுத்தாது- கர்நாடகா நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Karnataka India
By Vidhya Senthil Oct 16, 2024 09:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 மசூதியில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 கர்நாடகா 

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி மர்ப நபர்கள் சிலர் மசூதிக்குள் 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷங்களை எழுப்பி மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

karnataka

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் 2 பேரைக் கைது செய்தது.இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சபரிமலை போறீங்களா? இது கட்டாயம் இல்லை - முக்கிய அறிவிப்பு!

சபரிமலை போறீங்களா? இது கட்டாயம் இல்லை - முக்கிய அறிவிப்பு!

இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதி,மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' எனக் கோஷமிடுவது எந்த சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் என்பது புரியவில்லை என்று கூறினார்.

 சர்ச்சை

மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் இந்துக்களும், முஸ்லீம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாக நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத செயல்கள் இந்தியத் தண்டனை சட்டம் 295 ஏ பிரிவின் கீழ் குற்றத்திற்கு வழிவகுக்காது.

mosque

அவ்வாறு கூறப்படும் குற்றங்களில் எந்த மூலப்பொருளையும் கண்டறியாமல், இந்த மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதுப்பதி நீதி தவறிழைக்கும் செயலாகும்’ என்று தெரிவித்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.