உலகளவில் புதிய சாதனை படைத்த 'ஜெய் பீம்' கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Movie Record World New Jai Bhim
By Thahir Nov 11, 2021 12:30 AM GMT
Report

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சூர்யாவின் 39வது படமான இந்தப்படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப்படம் படைத்துள்ள புதிய சாதனையை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள்.

'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கு இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்தப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர்.

உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளமான ஐஎம்டிபி பட்டியலில் இதில் '3 இடியட்ஸ்', 'தாரே ஜமீன் பர்', 'லகான்', 'தங்கல்', 'அந்தாதூன்' உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இடம்பெறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது முதன் முறையாக ஐஎம்டிபி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது சூர்யாவின் 'ஜெய் பீம்' படம்.

9.6 ரேட்டிங் புள்ளிகள் பெற்று 'ஜெய் பீம்' முதல் இடத்தை பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.