“துயர்துடைக்கும் துணிந்த நெஞ்சம், கலைநாயகனுக்கு வாழ்த்துகள்” - நடிகர் சூர்யாவுக்கு திருமாவளவன் வாழ்த்து

Surya Thirumavalavan Funding Jai Bhim
By Thahir Nov 16, 2021 09:18 PM GMT
Report

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய இந்தத் திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்களையும், அதனைத் தொடர்ந்து இருளர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்,

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

“துயர்துடைக்கும் துணிந்த நெஞ்சம், கலைநாயகனுக்கு வாழ்த்துகள்” - நடிகர் சூர்யாவுக்கு திருமாவளவன் வாழ்த்து | Jai Bhim Surya Funding Thirumavalavan

அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சென்னையில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவை நேரில் சந்தித்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார்.

இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்,

உழைக்கும் மக்களின் உள்ளங்களையும் உழைப்போருக்காக உழைப்போரின்

உள்ளங்களையும்

உவப்பூட்டி ஈர்க்கும்

உயர்ந்த நெஞ்சம்!

கண்ணீர் உகுக்கும்

கடைசி மனிதர்களின்

கவலையை வீழ்த்தும்

கனிந்த நெஞ்சம்!

துகள் துகளாய் நொறுக்கப்பட்டோரின்

துயர்துடைக்கும்

துணிந்த நெஞ்சம்!

கலைநாயகனுக்கு வாழ்த்துகள். என்று பதிவிட்டுள்ளார்.