நேரத்தை ஒதுக்கி “ஜெய்பீம்” பார்த்ததற்கு நன்றி - சீமானுக்கு நடிகர் சூர்யா ட்வீட்

Seeman Movie Suriya Jai Bhim Thanks To
By Thahir Nov 17, 2021 05:43 PM GMT
Report

'ஜெய் பீம்' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெய் பீம்' படம் பார்த்துவிட்டு சினிமாதுறையினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என சூர்யாவுக்கு பல தரப்பினரும் பாராட்டி அறிக்கை வெளியிட்டும் வீடியோ வெளியிட்டும் ஆதரவாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், 'ஜெய் பீம்' படம் பார்த்துவிட்டு பாராட்டிய சீமானுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா. அவரது ட்வீட்டர் பக்கத்தில், 'தங்களது நேரத்தை ஒதுக்கி எங்கள் திரைப்படத்தை பார்த்ததற்கு நன்றி.

சட்டமும், நீதியும் ஒப்பற்ற ஆயுதங்கள் என்பதை உரக்க கூறவே ஜெய் பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது. தாங்கள் கூறிய வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது' என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.