ஜெய்பீம் படம் முழுக்க அழுதேன், வெட்கமா இருக்கு - நடிகர் சித்தார்த் வேதனை

Movies Review Siddharth Jai Bhim
By Thahir Nov 03, 2021 05:03 AM GMT
Report

த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் வெளியானது. படம் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டும் அல்லாமல் திரையுலக பிரபலங்களும் ஜெய்பீம் பற்றி சமூக வலைதளங்களில் பெருமையாக பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஜெய்பீம் படம் முழுக்க அழதேன். என் இதயம் வலித்தது. குற்ற உணர்ச்சியாகவும், வெட்கமாகவும் இருந்தது.

இந்த படத்தை தயாரித்த ஜோதிகா மற்றும் சூர்யாவுக்கு ஹாட்ஸ் ஆஃப். ஒரு முன்னணி நடிகர் தன்னை பற்றி மட்டும் அல்லாத சிறந்த படத்தை எப்படி அளிக்கலாம் என்பதை சூர்யா காட்டிவிட்டார்.

இப்படி ஒரு முக்கியமான படத்தை இயக்கிய ஞானவேலுக்கு நன்றி. மொத்த படமும் லிஜோமோல் தோள்களில் தான் இருக்கிறது. அவரின் கண்கள் செங்கனியின் வாழ்க்கையை பற்றி பேசியது.

அருமை. பிராவோ மணிகண்டன். படக்குழுவினர் ஒவ்வொருத்தரும் பாராட்டுக்குரியவர்கள். ஜெய்பீம் வந்ததில் பெருமையாக இருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு என்ன ஒரு வெற்றி என்றார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப் போற்று படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் ரிலீஸாகியிருக்கும் ஜெய்பீமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.