நடிகர் சூர்யா எங்கள எட்டி கூட பார்க்கல..ஒரு உதவியும் செய்யல - வைரலாகும் ராசாக்கண்ணு மனைவி

Movie Suriya Wife Jai Bhim Rasakanu
By Thahir Nov 16, 2021 03:40 PM GMT
Report

நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தின் மூலம் கோடிகளை சம்பாத்தியிருக்கிறார்.ஆனால் எங்களுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை என ராசாக்கண்ணு மனைவியின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய்பீம் படத்தில் போலீஸ் சித்ரவதையால் இறந்த தன் கணவர் ராசாக்கண்ணுக்கு நியாயம் கேட்டு போராடுவார் செங்கேணி. அவருக்கு வழக்கறிஞரான சூர்யா உதவி செய்வார்.

இந்நிலையில் நிஜ ராசாக்கண்ணுவின் மனைவியான பார்வதி அம்மாள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது.

அந்த பேட்டியில் பார்வதி அம்மாள் கூறியிருப்பதாவது, எங்கள் கதையை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அந்த படம் மூலம் சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்திருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

இதுவரை எங்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம். என் வீட்டுக்காரரை அடிச்சு, என் பிள்ளைகளை அடிச்சு.

எங்களுக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. ஒரு வீடு வாசல் கொடுத்து, ஏதாவது உதவி செய்யுங்கள். என் பேரப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கிக் கொடுங்க.

அதை தான் கேட்கிறோம் என்றார். பார்வதி அம்மாளின் மருமகன் கூறியிருப்பதாவது, நான் இத்தனை காலமாக சூர்யா ரசிகனாக இருந்தேன். இனி இல்லை. அவர் எங்களை பார்க்கவே இல்லை.

நாங்கள் குரவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். படத்தில் இருளர் என்று காட்டி எங்களுக்கு வர வேண்டிய சலுகைகளை அவர்களுக்கு கிடைக்க வைத்திருக்கிறார் என்றார்.