“ஜெய்பீம்” படத்திற்கு எதிராக கிளம்பிய பாமகவினர்.. கொந்தளிக்கும் மக்கள் - நடிகர் சூர்யாவிற்கு பெருகும் ஆதரவு
கடந்த நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது “ஜெய்பீம்” திரைப்படம்.
இருளர் பழங்குடியின மக்கள் சந்திக்கும் அவலங்களை அவர்கள் சந்தித்த கொடுமைகளின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவானது இத்திரைப்படம்.
'ஜெய் பீம்' படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்திவிட்டதாக பிரச்சனைகள் எழுந்தது.
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐபிசி தமிழ் இத்திரைப்படத்திற்கு எதிராக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக மக்களிடம் நேரடியாக சென்று கருத்து கேட்டது.
இதற்கு பெண்கள்,இளைஞர்கள்,மாணவர்கள் என அனைவரும் பெரும்பாலனோர் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐபிசி தமிழுக்கு பேட்டியளித்த மக்கள் நடிகர் சூர்யா உண்மை சம்பவத்தை தான் படமாக எடுத்திருக்கிறார்.இதில் என்ன தவறு இருக்கிறது.நாங்கள் சூர்யாவை ஆதரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.