ஜெய் பீம் பட சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் டிசி கொடுக்கவில்லை - பெற்றோர் மறுப்பு
'ஜெய் பீம்' படத்தில் நடித்த சிறுமியின் டிசியை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக வெளியான தகவல் வதந்தி என சிறுமியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' திரைபடம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த சிறுமியின் டி.சி-யை வாங்கிக் கொள்ள பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தில் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜாகண்ணு - செங்கணி தம்பதியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தையின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் படத்தில் நடித்த குழந்தையின் டிசியை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்த ரியாஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர் இது பொய்யான தகவல் பள்ளியில் அனைவரும் குழந்தை ஆதரிக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.
சமூக வளைதலங்களில் வெளியானது முற்றிலும் தவறான தகவல் என தெரியவந்துள்ளது.