'ஜெய் பீம்' படத்தில் நடித்த சிறுமியின் டிசியை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தல்

Return Jai Bhim Child Actor School DC Persuasion
By Thahir Nov 04, 2021 10:25 AM GMT
Report
169 Shares

'ஜெய் பீம்' படத்தில் நடித்த சிறுமியின் டிசியை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்தல் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த சிறுமியின் டி.சி-யை வாங்கிக் கொள்ள பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தில் லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் தா.செ.ஞானவேல் இயக்கும் இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ள இந்தப்படம் அணைத்து தரப்பினர்களிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜாகண்ணு - செங்கணி தம்பதியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த குழந்தையின் நடிப்பு பலரையும் கவர்ந்திருந்தது.

இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்ததற்காக அந்தக் குழந்தையின் டிசியை வாங்க சொல்லி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்த ரியாஸ் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'ஜெய் பீம்' படத்தை உலகமே கொண்டாடுற நேரத்துல படத்துல நடிச்ச குழந்தையோட பள்ளி நிர்வாகம் டிசியை வாங்க சொல்லி இருக்காங்க என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட் வைரலானதை தொடர்ந்து பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

You May Like This