தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா - சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படம் 2 விருதுகளை வென்றது

Prakash Raj Suriya Lijomol Jose
By Swetha Subash May 03, 2022 01:54 PM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

நடிகர் சூர்யா நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய் பீம்.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை லிஜோ மோல் ஜோஸ்,ரஜிஷா விஜயன், நடிகர் மணிகண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா - சூர்யா நடித்த

இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியால் பல , விருதுகளும் கிடைத்தன . இந்நிலையில் 12-வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில், விருதுகள் பட்டியல் வெளியான நிலையில் ,ஜெய்பீம் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன .

சிறந்த படமாக ஜெய்பீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது ,மேலும் படத்தில் ராஜகண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் பகிர்ந்துள்ளது.