ஜெய் பீம் படம் எப்படி இருக்கும் - ரசிகர்களின் விமர்சனம் இதோ
நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் தீபாவளி வெளியீடாக நடிகர் சூர்யா நாயகனாக நடித்து தயாரித்துள்ள் படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், மணிகண்டன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா வக்கீல் சந்துரு கேரக்டரில் நடித்துள்ளார். படம் பார்த்த ரசிகர்கள் ஜெய் பீம் குறித்த பல்வேறு விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
அதிகாரக் கட்டமைப்பு தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்யும்..
— ஆனந்த் (@anand17m) November 2, 2021
அதே அதிகார அரசால் அநியாயம் இழைக்கப்பட்டவர்கள் போராடினால், அது ஒரு நெடிய போராட்டமாக இருந்தாலும் உரிய நியாயம் கிடைக்காமல் போகாது என்பதை உணர்த்தி உள்ளனர்..#ஜெய்பீம்
இட ஒதுக்கீடு ஏன் என்று இன்னும் புரியவில்லையா??#ஜெய்பீம் படத்தை பாருங்கள் ?❤️?
— சிபி?❤️ (@sibi_ragavan) November 2, 2021
சமத்துவம்! சம உரிமை! pic.twitter.com/9OVKGikqMc
வழக்கறிஞர்கள் எல்லாம் சட்டத்தை உண்மைக்காக மட்டுமே பயன்படுத்தினால் நீதி வெல்லும்.. #ஜெய்பீம் #சந்துரு pic.twitter.com/xRmrvZDPYo
— ஆனந்த் (@anand17m) November 2, 2021
ஒரு அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் எளியவர் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகிறது என்பதை முகத்தில் அடித்தார் போல் கூறியுள்ளனர்... #ஜெய்பீம்
— ஆனந்த் (@anand17m) November 2, 2021