‘ஜெய் பீம்’ படம் பார்த்து கண்கலங்கி அழுத சீனர்கள் - வைரலாகும் வீடியோ
மெல்பர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஜெய் பீம்’ படம் பார்த்து சீனர்கள் கண்கலங்கி அழுதுள்ளனர்.
‘ஜெய் பீம்’ படம்
த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யா அந்தப் படத்தை தனது 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்தார். மணிகண்டன், லிஜோ மோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.
‘ஜெய் பீம்’ படம் ராசாக்கண்ணு என்பவருக்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். நடிகர் சூர்யா அந்தப் படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வுரிமைக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். ‘ஜெய் பீம்’ படம் பேசுபொருளாகவும் மாறியது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பல அங்கீகாரங்களும் கிடைத்து வருகிறது.
‘ஜெய் பீம்’ திரைப்படம் ஏற்கெனவே நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது.
மெல்பர்னில் வெளியிடப்பட்ட ‘ஜெய் பீம்’
கடந்த 12ம் தேதி முதல் இன்று (20.08.2022) மெல்பர்னில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ஜெய் பீம் மட்டுமின்றி, பல அசத்திய படங்களும் இதில் திரையிடப்பட்டுள்ளன. அதில், ஜெய்பீம் படம் திரையிடப்பட்டது. ஜெய்பீம் படத்தைப் பார்த்து சீனர்கள் கண்கலங்கி அழுதுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடு, மொழி கடந்து உலக மக்களிடையே பெரும் வரவேற்பையும், அன்பையும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் பெற்றுள்ளது.
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ள நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கும் கூடுதல் கவுரவம் கிடைத்துள்ளது சூர்யா தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Audience Response for #JaiBhim after the Screening at Beijing International Film Festival@Suriya_offl ? pic.twitter.com/bErpOOZ1Uf
— Christopher kanagaraj (@chirssucces) August 19, 2022

வடக்கின் பாடசாலைகளுக்கு சவாலாகியுள்ளஉயிர்கொல்லி போதைப்பொருள்! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை IBC Tamil
