மெல்போர்ன் திரைப்பட விழாவில் ஜெய் பீம் - குவியும் அங்கீகாரம்!
சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் மெல்பர்ன் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
ஜெய் பீம்
ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டினர். இந்நிலையில் இப்படம் மெல்பர்னில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
மெல்பர்ன் திரைப்பட விழா
வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மெல்பர்னில் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் ஜெய் பீம் மட்டுமின்றி, பல அசத்திய படங்களும் இதில் திரையிடப்படவுள்ளது.
சுதாகொங்கராவின் இணை இயக்குநரான சிவகணேஷ் இயக்கியுள்ள பராசக்தி மற்றும் பெரியநாயகி, ரோடு டு குதிரையர் ஆகிய தமிழ் படங்களும் திரையிடப்படவுள்ளன. இதேபோல் டாப்ஸி நடிப்பில் வெளியான Dobaaraa படமும் இந்த மெல்பர்ன் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
கூடுதல் கவுரவம்
ஜெய்பீம் திரைப்படம் ஏற்கனவே நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை குவித்துள்ள நிலையில்
தற்போது ஜெய் பீம் திரைப்படத்திற்கும் கூடுதல் கவுரவம் கிடைத்திருப்பது சூர்யா தரப்பை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.