14வது குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர்

Narendra Modi India Draupadi Murmu
By Sumathi Aug 11, 2022 07:59 AM GMT
Report

குடியரசு துணை தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

புதிய துணை ஜனாதிபதி

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நாடாளுமன்றத்தில் கடந்த 6ம் தேதி நடந்தது.

14வது குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர் | Jagdeep Dhankhar Take Oath As Vice President India

இதில், பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஜெகதீப் தன்கரும் (71), எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராஜஸ்தான் ஆளுநருமான மார்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிட்டனர்.

 ஜெகதீப் தன்கர்

இதில், பாஜ கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளையும், மார்கரெட் ஆல்வா 182 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதன் மூலம், 346 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீப் தன்கர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நாட்டின் 14வது குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்றார். டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பதவ்வியேற்பு விழா நடைபெற்றது.

பதவிப் பிரமாணம்

இதில் குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.