வெளியானது ஜகமே தந்திரம்: சமூக வலைத்தளங்களில் கொண்டாடும் ரசிகர்கள்
                    
                JagameThandhiram
            
                    
                ஜகமேதந்திரம்
            
            
        
            
                
                By Petchi Avudaiappan
            
            
                
                
            
        
    நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் உலகம் முழுவதும் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ்,ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்க் ஆகியோர் நடித்திருக்கும் படம் "ஜகமே தந்திரம்".
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் 190 நாடுகளில், 17 மொழிகளில் இன்று வெளியானது.
இதனை முன்னிட்டு டிவிட்டரில் #JagameThandhiram, #Suruli, #Dhanush ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மேலும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் படத்தின் காட்சிகளை ஸ்டேட்டஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.