190 நாடுகள்... 17 மொழி...வேற லெவலில் வெளியாகும் ஜகமே தந்திரம்
தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ்,ஜேம்ஸ் காஸ்மோ, நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் நேரடியாக உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்மூலம் முக்கிய அப்டேட்டையும் தெரிவித்துள்ளது.
அதாவது இப்படம் 190 நாடுகளில் ஓடிடியில் வெளியாவதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் உட்பட 17 மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.