‘ஜகமே தந்திரம்’ எனது கனவு திரைப்படம்..! - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி..!

movie trailer jagame thandiram
By Anupriyamkumaresan Jun 01, 2021 11:12 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in திரைப்படம்
Report

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது.

‘ஜகமே தந்திரம்’ எனது கனவு திரைப்படம்..! - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி..! | Jagame Thandiram Trailer Release Karthik Suppuraj

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு குழு முடிவு செய்தது.

இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படம் குறித்து பேசியுள்ளார்.

‘ஜகமே தந்திரம்’ எனது கனவு திரைப்படம்..! - கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி..! | Jagame Thandiram Trailer Release Karthik Suppuraj

அதில், ஜகமே தந்திரம் எனது கனவு திரைப்படம் என்றும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மிக விறுவிறுப்பான வகையில், உலகில் தற்போது நடைமுறையில் இருக்கும் மிகமுக்கியமான பிரச்சினையை உள்ளூரில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்து மிக சுவாரஸ்யமாகவும், கொண்டாட்டத்துடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம் என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.