ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கும் இப்படி ஒரு நிலைமையா? - படக்குழுவினர் அதிர்ச்சி!

release movie jagame thandiram tamilrockers
By Anupriyamkumaresan Jun 19, 2021 03:07 AM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று ஓடிடியில் வெளியாகியிருக்கும் ஜகமே தந்திரம் படம் தமிழ் ராக்கர்ஸ், டெலிகிராமில் கசிந்துவிட்டது. அதுவும் படம் ரிலீஸான வேகத்தில் கசிந்திருக்கிறது.

தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படம் நேற்று மதியம் 12.30 மணிக்கு நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்

ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கும் இப்படி ஒரு நிலைமையா? - படக்குழுவினர் அதிர்ச்சி! | Jagame Thandiram Film Release In Tamil Rockers

அது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு இல்லாதவர்களோ, தனுஷ் ரசிகர்கள் யாராவது உதவ முடியுமா என்று கேட்கிறார்கள்.

படம் ரிலீஸான கையோடு அது டெலிகிராம், தமிழ் ராக்கர்ஸில் வந்துவிட்டதா என்று பலரும் ட்வீட் செய்தார்கள்.இந்நிலையில் ஜகமே தந்திரம் ரிலீஸான வேகத்தில் அதை ஆன்லைனில் ஹெச்.டி. தரத்தில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

எந்த படம் ரிலீஸானாலும் அதை ஆன்லைனில் கசியவிடுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். படம் தியேட்டர்களில் அல்ல மாறாக ஓடிடியில் வெளியானாலும் அதை கசியவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கும் இப்படி ஒரு நிலைமையா? - படக்குழுவினர் அதிர்ச்சி! | Jagame Thandiram Film Release In Tamil Rockers

கொரோனா காலத்தில் தனுஷ் படம் ஓடிடியில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ஹிட்டானது.

படம் ரீலீசான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸ் படத்தை லீக் செய்த செயல் படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.