சென்னை அணியில் நீடிப்பாரா ஜடேஜா - முக்கிய தகவலால் ரசிகர்கள் கவலை..!

Ravindra Jadeja Chennai Super Kings
1 மாதம் முன்

ரவீந்திரா ஜடேஜா மன வேதனையில் இருப்பதாக நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டின் 15 வது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது.இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தோனி அறிவித்தார்.

சென்னை அணியில் நீடிப்பாரா ஜடேஜா - முக்கிய தகவலால் ரசிகர்கள் கவலை..! | Jadeja Will Not Last In The Team In Chennai

இதையடுத்து சென்னை அணியின் கேப்டன் பதவி ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடரை துவங்கியது.

அடுத்தடுத்து படு தோல்விகளை சந்தித்தது சென்னை அணி.ஜடேஜா தலைமையில் 8 போட்டிகளை எதிர்கொண்ட சென்னை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இரண்டிலும் மிக மோசமாக செயல்பட்டது.ஜடேஜாவும் இந்த தொடரில் மிக மோசமாக விளையாடினார்.

இதனிடையே ஜடேஜா தனது வழங்கப்பட்ட கேப்டன் பதவியிலிருந்து விலகி கொண்டார். மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகும் பெரிதாக விளையாடாத ஜடேஜா, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகினார்.

இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் நெருக்கிய நண்பர் ஒருவர் இன்சைடு ஸ்போர்ட்ஸ் என்ற வளைத்தள பக்கத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் ரவீந்திர ஜடேஜா தற்போது மன வருத்தத்திலும்,மிகுந்த மன வேதனையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேப்டன்சி விவகாரத்தில் ஜடேஜாவை அணி நிர்வாகம் சரியாக கையாண்டு இருக்கலாம். வேறு எந்த வீரராக இருந்தாலும் அவருக்கு இது போன்ற சம்பவம் ஏற்பட்டு இருந்தால் மன வலியை தந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.

சென்னை அணியில் ஜடேஜா நீடிப்பாரா,இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்தார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.