ஒரே போட்டியில் 3 சாதனைகள் - மாஸ் காட்டும் ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 3 சாதனைகளை படைத்ததுள்ளார்.
இங்கிலாந்து தொடர்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 T20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
5 டி20 போட்டிகளில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று முதலாவது ஒரு நாள் பொட்டில் நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா வெற்றி
இதில் இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பட்லர் மற்றும் பெத்தேல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர்.
249 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 87 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்தனர்.
ஜடேஜாவின் சாதனைகள்
இந்த போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3 சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6வது இந்திய வீரர் எனும் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும், இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிக பட்சமாக இருந்த நிலையில், தற்போது ஜடேஜா 42 விக்கெட்கள் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த போட்டியில் 12 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகளை எடுத்த 2வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும் ஜடேஜா 12வது முறையாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.