ஐயோ போச்சே!! ஐபிஎல் தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா முழுமையாக விலகல் : ரசிகர்கள் அதிர்ச்சி!
காயம் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி விலகியதால், புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.
ஆனால் கேப்டனாக பதவியேற்றதன் முதல் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்ததை தொடர்ந்து, தனது விளையாட்டில் கவனம் செலுத்தப் போவதாக கூறி மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா.
இந்நிலையில் தற்போது தொடரில் இருந்தே விலகும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயம் காரணமாக தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா முந்தைய சீசன்களிலும் அட்டகாசமான பங்களிப்பை சிஎஸ்கே அணிக்கு செலுத்தி வந்தார்.
இந்நிலையில், இந்த சீசன் தொடங்கியதில் இருந்து மோசமான ஃபார்ம் காரணமாக சிரமப்பட்டு வரும் அவர் பல்வேறு கேட்சுகளை கூட களத்தில் கோட்டைவிட்டார்.
ஜடேஜாவா இது என வியக்கும் அளவிற்கு அது இருந்தது. இந்நிலையில், அவர் முழுமையாக விலகுவதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான சென்னை அணியின் போட்டியில் காயம் காரணமாக ஜடேஜா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.