3வது டி20 போட்டியில் பந்து வீசாத ரவீந்திர ஜடேஜா - காரணம் இதுதான்..!
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து வீசவில்லை.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே முதலிரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில் 3வதாக நடந்த போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையில் 3வதுடி 20 போட்டியில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து வீசவில்லை. இதற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளம் வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஸ்னோய்க்கு அதிக வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என்றே திட்டமிட்டிருந்ததால் நான் பந்துவீசவில்லை என தேரிவித்துள்ளார்.
மேலும் முடிந்தவரை இந்திய அணியின் வெற்றிக்காக கண்டிப்பாக எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் எனவும் ஜடேஜா தெரிவித்துள்ளார்.