“எது பண்ணாலும் வரலாறு பேசணும்”- புதிய சாதனைப் படைத்த ரவீந்திர ஜடேஜா
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கும், இந்திய அணி 278 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 303 ரன்கள் குவிக்க இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 209 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வீரர் ஜடேஜா 56 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 200 விக்கெட்டுகள் வீழ்த்தி 2 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய ஆல் ரவுண்டர் என்ற வரலாறை ஜடேஜா படைத்துள்ளார்.
சர் இயன் போதம், கபில் தேவ், இம்ரான் கான், ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் இந்த பட்டியலின் முதல் நான்கு இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.