5 மாதங்களுக்குப் பிறகு முதல் சர்வதேச போட்டி : அசத்திய ரவீந்தர ஜடேஜா

Ravindra Jadeja
By Irumporai Feb 09, 2023 10:34 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா, நாக்பூர் டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சிகிச்சையில் ஜடேஜா

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் விளையாடிய ஜடேஜா அதன் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் இப்போது மீண்டும் உடல்தகுதியைப் பெற்று வருகிறார்.

மீண்டும் சாதனை

இதையடுத்து சமீபத்தில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் அவர் உடல்தகுதியை நிரூபிக்க விளையாடினார். இந்த போட்டியில் பேட்டிங்கில் 15 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தாலும், பவுலிங்கில் 7 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

5 மாதங்களுக்குப் பிறகு முதல் சர்வதேச போட்டி : அசத்திய ரவீந்தர ஜடேஜா | Jadeja Picks A Fifer In Napur Test

5 மாதங்களுக்கு பிறகு

இந்த நிலையில் இன்று நடந்துவரும் ஆஸி அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச்க் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜடேஜா முதல் போட்டியிலேயே தனது முத்திரையைப் பதித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் ஜடேஜா