‘டேய்..நான் டீம் ஆள் இல்லடா.. அம்பயர்’ - ஜடேஜாவால் நடந்த கலாட்டா
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா, போட்டி நடுவரை தட்டி கொடுத்து பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐபிஎல் டி20 தொடரின் 35வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் நேற்று மோதின. இப்போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில் போட்டியின் போது சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா போட்டி நடுவரை தட்டி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜடேஜா பந்துவீசும் போது ஒரு பந்து சற்று அகலமாக சென்றது. இதற்கு அம்பயர் வைடு கொடுப்பார் என பெங்களூர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அம்பயரோ வைடு கொடுக்கவில்லை.
இதனை கவனித்த ஜடேஜா அம்பயரின் தோளில் தட்டி கொடுத்தார். இதனை அதிர்ச்சி கலந்த புன்னகையோடு ஜடேஜா எதிர்கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
— pant shirt fc (@pant_fc) September 24, 2021
அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் IBC Tamil
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan