ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அட்மினின் மூக்கை உடைத்த ஜடேஜா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

msdhoni chennaisuperkings ravindrajadeja ipl2022
By Petchi Avudaiappan Jan 29, 2022 11:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஐபிஎல் ஏலம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ட்வீட் ஒன்றுக்கு இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் நடக்கவிருக்கும் 15வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க 1214 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த மெகா ஏலத்தை ஸ்டார் நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. 

இதனை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை அணி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ட்வீட் ஒன்றை பதிவிட்ட நிலையில் அது சர்ச்சையாகியுள்ளது. 

ஐபிஎல் அணிகள் எந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தயார் செய்து வருகின்றன. ரசிகர்களும் எந்த விரர்களை தங்களது அணி எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் தேர்வு செய்து பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே சென்னை அணி எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ரசிகர்கள் தேர்ந்து எடுங்கள் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு ட்வீட் போட்டுள்ளது.

இதில் சென்னை அணி தக்க வைத்துள்ள வீரர்களைபேட்டிங் வரிசையில் போட்டு மற்றவர்களை தேர்ந்து எடுங்கள் என்று அதன் அட்மின் போட்டு இருந்தார். இதில் ருத்துராஜ்க்கு பேட்டிங் வரிசையில் முதல் இடமும், மொயீன் அலிக்கு 3வது இடமும், தோனிக்கு 7வது இடமும், ஜடேஜாவுக்கு 8வது இடமும் போடப்பட்டிருந்தது.  

இதனால் கடுப்பான ஜடேஜா, என்னை ஏன் இவ்வளவு சீக்கிரமாக 8வது வரிசையில் இறக்கிவிடுகிறீர்கள், எனக்கு பேட்டிங் வரிசையில் 11வது இடத்தை தாருங்கள் என்று நகைச்சுவை கலந்து கூற நிச்சயம் அந்த அட்மின் நோஸ்கட் வாங்கியிருப்பார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல் போட்டியில் முன்வரிசையில் இறங்க போகிறேன் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.