ஜடேஜாவுக்கு சிலை - தளபதிக்கு பிரியாவிடை கொடுத்த சிஎஸ்கே!
ஜடேஜாவுக்கு சென்னை அணி பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளது.
ஜடேஜா
சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இளம் வீரர் சாம் கரனும் மாறியுள்ளார்.

அதற்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கி இருக்கிறது. ஜடேஜாவை சிஎஸ்கே அணி ரூ.18 கோடிக்கு கடந்த சீசனில் ரீடெய்ன் செய்த நிலையில், தற்போது அவருக்கு ரூ.14 கோடிக்கு மட்டுமே ராஜஸ்தான் அணி ஊதியமாக அளிக்க உள்ளது.
பிரியாவிடை
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்காக சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சேப்பாக்கம் மைதானத்தின் மேல் ஜடேஜாவுக்கு ஒரு மாபெரும் சிலை வைத்திருப்பதை போல காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், ஜடேஜாவின் சிறந்த ஆட்டங்களின் தொகுப்பையும் சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. ஜடேஜா தனது தொடக்க கால சிஎஸ்கே அனுபவங்கள் குறித்தும், சிஎஸ்கே அணியுடனான பயணம் குறித்தும் பேசியுள்ளார். இறுதியாக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.