ஐபிஎல் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்த ஜடேஜா
ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார்.
CSK vs RCB
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் மோதின.
சேப்பாக்கம் மைதானத்தில் 17 வருடங்களுக்கு பிறகு பெங்களூரு அணி, சென்னையை வீழ்த்தியுள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜடேஜா படைத்த சாதனை
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜடேஜா தற்போது ஐபிஎல் தொடரில், 3001 ரன்கள் குவித்துள்ளதோடு, 160 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ரவீந்திர ஜடேஜா, பல்வேறு இக்கட்டான போட்டிகளில் அதிரடியாக ரன் குவித்தும், முக்கிய விக்கெட்களை வீழ்த்தியும், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
CSK அணிக்காக அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில், 127 போட்டிகளில் விளையாடி, 1939 ரன்கள் குவித்து 5வது இடத்தில் உள்ளார்.
தோனி CSK, அணிக்காக 236 போட்டிகளில் விளையாடி, 4,699 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.