‘ ‘ஜடேஜாவுக்கு ஆங்கிலமே வராது ’’ - மீண்டும் சர்ச்சையில் சஞ்சய் மஞ்சரேக்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது என கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர்
. முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.
இவர் அடிக்கடி முன்வைக்கும் விமர்சனமும் கருத்துகளும் சர்ச்சையாகும் . ஏற்கனவே ஜடேஜா குறித்து வர்ணனை செய்ததில் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளாகியிருந்தார் மஞ்சரேக்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினின் பெயர் இல்லை என கூறி சர்ச்சையினை கிளப்பினார்.
அதற்கு அஷ்வின் மீம் ஒன்றை நகைச்சுவையாக பதிவிட்டு சர்ச்சையை முடித்து வைத்தார் அஷ்வின்.
இந்த நிலையில் ட்விட்டரில் சூர்யநாராயணன் என்பவர் மஞ்சரேக்கருடன் செய்த சாட் பதிவை வெளியிட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
அதில் சஞ்சய் மஞ்சரேக்கர் அந்த சாட்டில் அந்த நபரிடம் ஜடேஜா தொடர்பாக நிறைய வாதாடிருக்கிறார்,.
முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் நான் சொன்னது அவருக்கு புரியவில்லை. எனக்கு அவர் அளித்த பதில் கூட வேறுயாராவது ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்து இருப்பார்கள்" என கூறியுள்ளார்.
இந்த பதிவு தான் மீண்டும் சர்ச்சையினை கிளப்பியுள்ளதுபிசிசிஐ எதிர்காலத்ததில் கூட இதுபோன்ற நபர்களை வர்ணனையாளர் குழுவில் சேர்க்க கூடாது" என இணைய வாசிகள் கூறிவருகின்றனர்.