மோசடி வழக்கில் உண்மையை ஒப்புக்கொண்ட நடிகை ஜாக்குலின் - ரசிகர்கள் அதிர்ச்சி - பரபரப்பு
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சமீபத்தில் மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வந்தார். அப்போது, அங்கு அவரை அமலாக்கத் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்கள்.
சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் நடிகை ஜாக்குலினின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினார்கள்.
இதனையடுத்து, நடிகை ஜாக்குலினிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுகேசின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல்வேறு தகவல்களை விசாரணை குழுவிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசை சந்தித்ததாகவும், அதன் பிறகு அவர் தனக்கு நிறைய பரிசுகள் தந்ததையும் அவர் விபரமாக விசாரணை குழுவிடம் தெரிவித்திருக்கிறார்.
நடிகை ஜாக்குலின் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்துள்ளதாகவும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளதாகவும், இவை அனைத்தையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சுகேஷ் மீதான பணப்பரிமாற்ற குற்றப் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளார்.