பிரபல நடிகை ஜாக்குலின் சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி - பரபரப்பு சம்பவம்
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்.
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடையதாக ஏற்கெனவே ஜாக்குலினுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சமீபத்தில் மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வந்தார். அப்போது, அங்கு அவரை அமலாக்கத் துறையினர் அதிரடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டார்கள்.
சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இடையே பணப் பரிவர்த்தணை நடந்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், நடிகை ஜாக்குலினின் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் தற்போது முடக்கியுள்ளனர். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.