உசேன் போல்ட் இடத்தை நிரப்பப் போகும் இத்தாலிய வீரர்...!

italy usain bolt tokyo olympics 2020 Lamont Marcell Jacobs
By Petchi Avudaiappan Aug 03, 2021 08:45 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

உசேன் போல்ட் எனும் மின்னல் மனிதரின் ஓய்வுக்குப் பிறகு அவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் எப்படியும் இந்த முறை தாங்கள் தான் தங்கம் வெல்வோம் என்ற எண்ணத்தில் அமெரிக்கா இருந்தது.

உசேன் போல்ட் இடத்தை நிரப்பப் போகும் இத்தாலிய வீரர்...! | Jacobs Wins Mens 100M Gold At Tokyo Olympics

அதற்கு காரணம் 2008, 2012, 2016 எனத் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்ஸிலும் அமெரிக்க வீரர்களை தோற்கடித்து சாதனை மேல் சாதனை செய்து தங்கப்பதக்கங்களை அள்ளிய ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓய்வுக்குப் பிறகு நடக்கும் ஒலிம்பிக் போட்டி என்பதால் தான் அந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் லேமன்ட் மார்ஷல் ஜேக்கப்ஸ் தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் ஆச்சரிப்படுத்தியுள்ளார்.முதல் சுற்றில் 9.94 விநாடிகளிலும் , அரையிறுதியில் 9.84 விநாடிகளிலும், இறுதிப்போட்டியில் 9.80 விநாடிகளிலும் ஓடி ஜேக்கப்ஸ் சாதனைப் படைத்துள்ளார்.

ஒரே ஒலிம்பிக்கில் மூன்று சுற்றுகளில் ஒவ்வொரு சுற்றிலும் தனது பெஸ்ட்டைக் கொடுத்து முந்தைய ரெக்கார்டுகளை உடைத்திருக்கும் நபர் ஜேக்கப்ஸ் மட்டும் தான் என்பது சிறப்பான சம்பவம். மேலும் போட்டிக்கு முன்பு வரை 'ஜேக்கப்ஸ் யாரென்றே தெரியாது' என்பதை வெள்ளி வென்றிருக்கும் கெர்லே தெரிவித்திருப்பது இங்கு அவரின் வெற்றியை உணர்த்தியிருக்கிறது.

உசேன் போல்ட் இடத்தை நிரப்பப் போகும் இத்தாலிய வீரர்...! | Jacobs Wins Mens 100M Gold At Tokyo Olympics

இதுவரை தடகளத்தில் இத்தாலி பெரிதாக சாதித்ததில்லை. 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இதுதான் அவர்களின் முதல் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம்தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா மாற்று வழியில் ஜேக்கப்ஸை சொந்தம் கொண்டாட தொடங்கியுள்ளது.

அவரின் தந்தை அமெரிக்காவையும் , தாய் இத்தாலியையும் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்கா இந்த வெற்றியை கையிலெடுக்க திட்டமிட்டுள்ளது. எது எப்படியோ உலகமே கொண்டாடிய உசேன் போல்ட் விட்டுச் சென்ற தடங்களை எந்த வீரர் நிரப்பப்போகிறார் என்பதே மிகப்பெரிய கேள்விக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் விடை கிடைத்துள்ளது.